பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!
திருநெல்வேலி: கூடங்குளத்தில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி பணிகள் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன என அணு உலை வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டாவது அணு உலை மின் உற்பத்திக்காக தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர், "கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜூன் 24 ஆம் தேதி காலை 7 மணி வரை 687 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
முதலாவது அணு உலையின் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் நேற்று முதல் இரண்டு மாதங்களுக்கு மின் உற்பத்தி பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணி முடிந்த பின் 1,000 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி துவக்கப்படும்.கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைகள் நிறைவு பெற்றுவிட்டன. இது தொடர்பான அறிக்கை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications