நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு "குண்டு" வைக்க காத்திருக்கும் 'கூடங்குளம்'?
புதுவை: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவ்வளவு எளிதாக கரைசேர்ந்துவிட முடியாத அளவுக்கு வரிந்துகட்ட போகின்றன கிறிஸ்துவ அமைப்புகளும் என்.ஜி.ஓக்களும்... இதனால் நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும். இதற்காகத்தான் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்தார்.
ஆனால் ராஜினாமா செய்த மறுநாளே ஜான்குமார் வீட்டில் ரூ1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜான்குமாருக்கு நாராயணசாமி கொடுத்ததாக கூறப்பட்டது.

ஜான்குமார் மனைவி எதிர்ப்பு
இதனிடையே எம்.எல்.ஏ. பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்யக் கூடாது என தொடக்கம் முதலே அவரது மனைவி எதிர்த்து வருகிறார். அதுவும் நாராயணசாமிக்காக விட்டுத்தரவே கூடாது என்பது அவரின் பிடிவாதம்.

கூடங்குளம் நிதி உதவி
கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் தொகுதி நெல்லித்தோப்பு. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி உதவி செய்வதாகக் கூறி பல என்ஜிஓக்களுக்கான வெளிநாட்டு நிதி உதவியை ரத்து செய்ய வைத்ததில் முக்கிய பங்கு நாராயணசாமிக்கு உண்டு என்பது கிறிஸ்தவ மற்றும் என்ஜிஓக்களின் குற்றச்சாட்டு.

பாடம் புகட்ட ரெடி
இதற்கு பாடம் புகட்டும் வகையில் நாராயணசாமிக்கு எதிராக நெல்லித்தோப்பு தொகுதியில் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைப்போம் கடந்த ஆகஸ்ட் மாதமே என்ஜிஓக்கள் கூறியிருந்தன. தற்போது நெல்லித்தோப்புக்கு நவம்பர் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் நாராயணசாமி
இனி என்ஜிஓக்கள் ஓரணியில் திரண்டு நாராயணசாமிக்கு எதிராக வேலை செய்யக் கூடும். இது நிச்சயம் நாராயணசாமிக்கு கடும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும் என்கின்றன புதுவை அரசியல் வட்டாரங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications