கூடங்குளம் 2வது அணு உலையில் விரைவில் வெப்ப நீர் சோதனை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது போல் இரண்டாவது அணு உலையில் பணிகள் முடிந்து இன்னும் 2 வாரத்தில் வெப்ப நீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி விட்டது.

இந்த அணு உலையில் இருந்து கணிசமான அளவு மின்சாரம் கிடைத்து வருகிறது. இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவங்க இந்திய அணுசக்தி கழகம் திட்டமிட்டிருந்தது. முதல் அணு உலையில் உற்பத்தியை தொடங்கிய போது முதலில் 160 மெகா வாட் கிடைத்தது. பின் அது படிப்படியாக 1000 மெகா வாட் வரை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கி 1 வருடம் ஆகிவிட்டது. இதனால் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 15ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1 மாத காலமாக முதல் அணு உலையில் உறுதி தன்மை, அழுத்தம், வெப்பம் தாங்கும் திறன் உள்பட பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த ஆய்வுகள் அனைத்தும் இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் வழங்கப்பட்டது. முதல் அணு உலையில் விரைவில் வாணிக ரீதியாக மின்சாரம் தயாரிக்க அணு மின் நிலையம் திட்டமிட்டு வருகிறது. இதில் மின் உற்பத்தியை துவங்கிய உடன் 2 நாட்களுக்குள் 1000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டி விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் இரண்டாவது அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டத்திற்காக அனைத்து இறுதி கட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் இரண்டாவது அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications