ஜூலைக்குள் கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி- இயக்குனர்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் வரும் ஜூலை மாதத்திற்குள் மின் உற்பத்தி துவங்க முயற்சிகள் நடந்து வருவதாக அணு மி்ன் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் , "கூடங்குளம் அணு மின் நிலைய முதலாவது யூனிட்டில் இருந்து தினமும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு 2.4 கோடி யூனிட் அதாவது 24 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இங்கு யுரேனியம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு தினமும் 562 மெகா வாட் வழங்கப்படுகிறது. 2வது யூனிட்டில் வரும் ஜூலைக்குள் மின் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் இதுவரை 3 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் பொதுமக்களுக்கு அணு மின் நிலையம் குறித்த தவறான தகவல்களும், சந்தேகமும், பயமும் நீஙகியுள்ளது. இதனால் அணு மின் நிலையத்தை அடிக்கடி நிறைய பேர் பார்வையிடுகின்றனர்" என்று பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications