நிஜ "வெண்ணிலா கபடிக்குழு".. ஆட்டத்தின் நடுவில்.. நெஞ்சை பிடித்து சரிந்த வீரர்! மொத்த கிராமமே கண்ணீர்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே வெண்ணிலா கபடிக்குழு பட பாணியில் கபடி வீரர் ஒருவர் ஆட்டத்தின் நடுவே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெண்ணிலா கபடிகுழு, 2009-ம் ஆண்டு வெளியாகி தமிழ்நாடு முழுக்க ஹிட் அடித்த படம். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு இந்த படத்தில் நடித்து இருப்பார்.
விஜய் சேதுபதியும் கவுரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருப்பார். படத்தின் கிளைமேக்சில் விஷ்ணு மரணம் அடைவதாக எடுக்கப்பட்டு இருக்கும்.

நிஜ வெண்ணிலா கபடிக்குழு
இந்த படத்தில் போலவே நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் வருடா வருடம் கபடி தொடர் நடைபெறுவது வழக்கம். பல கிராமங்களில் இருந்து வீரர்கள் வந்து இங்கு தொடரில் கலந்து கொள்வார்கள். பல அணிகள் மோதும் ஆட்டங்கள் குழு குழுவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். கடைசியில் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி என்று சுற்று வாரியாக போட்டிகள் நடக்கும். இதற்கு பல ஆயிரம் ரூபாய் பரிசுகளும் வழங்கப்படும்.

கபடி
இந்த தொடர் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. இதில் நன்னிலத்தில் இருந்து வந்த அணி ஒன்று நேற்றைய போட்டியில் ஆடிக்கொண்டு இருந்தது. அப்போது போட்டிக்கு இடையே செந்தில் என்ற வீரர் மயக்கம் வருவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். சில முறை ரெய்டு சென்ற அவர்.. எனக்கு மூச்சு விட முடியவில்லை என்று கூறியுள்ளார். எப்போதும் துடிப்பாக ஆடும் இவர் மேட்ச் வின்னர் என்று கூறப்படுகிறது.

நெஞ்சு வலி
துடிப்பாக ஆடும் இவர் அன்று சோம்பலாக காணப்பட்டு இருக்கிறார். ஒரு ரெய்டு சென்றுவிட்டு மிகவும் களைப்பாக அவர் இருந்ததால் ரெஸ்ட் கொடுத்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத்துடிப்பு அதிகம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. நெஞ்சை வலிக்கிறது என்று கத்திய அந்த வீரர் அப்படியே நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த சக வீரர்கள் அவரை தூக்கிக் கொண்டு சென்றனர்.

மரணம்
காவலுக்கு இருந்த போலீசாரும் அவருடன் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மாரடைப்பு காரணமாக அவர் பலியானதாக கூறப்படுகிறது. செந்தில் மரணம் காரணமாக அவரின் சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டு இருந்த வீரருக்கு இப்படி மாரடைப்பு ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications