அடடா.. மங்களத்துக்கு சளித்தொல்லை.. கேம்ப்புக்கு போக முடியலை!
யானை மங்களம் புத்துணர்ச்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை.
கும்பகோணம்: மங்களத்துக்கு சளி இன்னும் குறையவே இல்லை. அதனால் நாளை ஆரம்பிக்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமுக்கு மங்களம் செல்லவில்லை என கூறப்படுகிறது.
எப்பவுமே வருஷா வருஷம் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த முகாம் 48 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு மெடிக்கல் செக்கப் முழுமையாக செய்யப்படும். அதோடு சத்தான சாப்பாடு அதாவது கூந்தல் பனை, ஆலைக்கரும்பு, பச்சிளம் சோளத்தட்டை மற்றும் பாசிபயிறும் கொள்ளும், வெல்லமும் சேர்த்து கவளமாக கொடுக்கப்படும்.

மன அழுத்தம் குறையும்
அத்துடன் உடற்பயிற்சியும் தரப்படும். 48 நாள் கழித்து முகாமிலிருந்து திரும்பி வரும்போது யானைகள் எல்லாம் ஃப்ரஷ் ஆகி விடும். அவைகளின் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக இருக்கும். கடைசி நாளில் அறநிலையத்துறை அதிகாரிகளும் பக்தர்களும் இந்த யானைகளை வழியனுப்பி வைப்பார்கள்.

உடம்பு சரியில்லை
இப்படித்தான் நாளை முகாம் தேக்கம்பட்டியில் ஆரம்பிக்க உள்ளது. ஆனால் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள யானை மங்களத்துக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை. முன்பு ஒருமுறை மங்களத்தை முகாமுக்கு கொண்டு சென்றார்கள்.

தீவிர சிகிச்சை
ஆனால் அங்கிருக்கும் மற்ற யானைகளுக்கும் சளி பரவிவிடும் என்பதால் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர். அப்போது பிடித்த சளி, இன்னும் மங்களத்துக்கு சரியாகவில்லையாம். அதற்கான சிகிச்சையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முகாமில் என்னவெல்லாம் மருத்துவ வசதிகள் செய்யப்படுமோ அதெல்லாம் இப்போது மங்களத்துக்கு தரப்பட்டு வருகிறது.

6 வருடங்கள்
எனவே இப்போது மீண்டும் முகாமுக்கு சென்றால், மற்ற யானைகளுக்கும் சளி பரவிவிடும் என்பதால் இப்போதும் மங்களத்தால் செல்ல முடியவில்லை. மங்களம் முகாமுக்கு போய் 6 வருஷமாகிறதாம்!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications