நாளை மகாமக தீர்த்தவாரி.. கும்பகோணத்தில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
கும்பகோணம்: கும்பகோணத்தில் நாளை மகாமக தீர்த்தவாரி நடைபெறவிருப்பதையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கும்பகோணமே மக்கள் கூட்டத்தில் சிக்கித் திணறி வருகிறது.
பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கில் சிறப்புப் பேருந்துகள் கும்பகோணத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமக விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் மகாமக விழா தொடங்கியது.

முன்பு போல இல்லாமல் மகாமக தீர்த்தவாரியின்போது கூட்ட நெரிசலைக் குறைக்க தற்போது படிப்படியாக பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மகாமக குளத்தில் புனித நீராடி உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெற உள்ளதால் அதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கில் சிறப்புப் பேருந்துகளும் விடப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து இன்று முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் தஞ்சை, பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு செல்கிறது. மேலும் அங்கிருந்து பக்தர்கள் எளிதாக திருச்சிக்கு வரும் வகையில் இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 23ம் தேதி வரை இயக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications