நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய்
கும்பகோணம்: தமிழ்நாட்டுல தேர்தல் காய்ச்சல் சும்மா அனலாய் தெறிக்குது! வேட்பாளர்கள்லாம் வீடு வீடா ஏறி இறங்கி, "கை சின்னத்துக்கு போடுங்க", "தாமரைக்கு போடுங்க"ன்னு மல்லுக்கட்டிட்டு இருக்காங்க. ஆனா, நம்ம கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் மட்டும் கொஞ்சம் மாற்றி யோசிச்சு, மொத்த ஊரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வச்சிருக்காரு!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பிச்சதுல இருந்தே, "தளபதி எங்க தொகுதிக்கு வருவாரா? வந்து ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுவாரா?"ன்னு ரசிகர்கள் ஆவலா காத்துட்டு இருக்காங்க. ஆனா, 233 தொகுதிக்கும் தலைவர் நேர்ல வர்றது கொஞ்சம் கஷ்டமான விஷயம் ஆச்சே! இதை புரிஞ்சுக்கிட்ட கும்பகோணம் வேட்பாளர் வினோத், "தலைவர் நேர்ல வரலனா என்ன... டெக்னாலஜில வருவாரு!"ன்னு களத்துல குதிச்சிட்டாரு.

என்னங்க இது மேஜிக்?
ஏதோ பழைய காலத்துல மைக்கை பிடிச்சு கத்துற காலம்லாம் போயிடுச்சு மக்களே! நம்ம வினோத் ஏஐ தொழில்நுட்பத்தை கையில எடுத்துருக்காரு. ஒரு பெரிய திரையிலயோ அல்லது மொபைல் வீடியோவிலயோ விஜய் நேர்ல நின்னு பேசுற மாதிரியே, அந்த கணீர்க்குரல்ல "கும்பகோணம் மக்களே... நம்ம வினோத்துக்கு வாக்களியுங்கள்" அப்படின்னு கேட்குற மாதிரி ரெடி பண்ணிட்டாரு.
மேலும் விஜய் குரலில் " உங்கள் விஜய் நான் வரேன், விசில் அடிக்க ரெடியா? எங்கள் ஓட்டு எங்கள் உரிமை! எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கல் ஓட்டு விசில் சின்னத்திற்குத்தான், யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம், உங்களோட நான் இருக்கேன்.
ஏப்ரல் 23 ஆம் தேதி 233 தொகுதிகளிலும் ஒவ்வொருவரும் விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும் பாருங்க. இவ்வாறு அந்த ஏஐ டெக்னிக்கில் விஜய் குரல் ஒலிக்கிறது.
இதைப் பார்த்த மக்கள், "என்னது... விஜய் சார் இங்கே வந்துட்டாரா?"ன்னு ஓடி வந்து பார்க்க, அங்கே இருக்கிறது நம்ம 'டிஜிட்டல் தளபதி'ன்னு தெரிஞ்சதும் செம குஷி ஆயிட்டாங்க!
வைரலாகும் வீடியோ!
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த AI விஜய் பரப்புரை வீடியோ தான் 'டிரெண்டிங்'.
ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ்: "தலைவர் அரசியல்லயும் அப்டேட் ஆயிட்டாருப்பா!"
எதிர்க்கட்சிகள் மைண்ட் வாய்ஸ்: "இது என்ன புது குடைச்சலா இருக்கு? நாமளும் ரோபோட்டையாவது கூட்டிட்டு வருவோமா?"
ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு ரூட்ல ஓட்டு கேட்க, நம்ம தவெக வேட்பாளர் 'டெக்னாலஜி' ரூட்ல போயி ஸ்கோர் பண்றாரு. மொத்தத்துல, கும்பகோணம் முழுக்க இப்போ "தளபதி வாய்ஸ்" தான் எதிரொலிக்குது.
நிஜமாவே விஜய் வர்றாரோ இல்லையோ, இந்த AI விஜய் இப்போதைக்கு கும்பகோணத்தை ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காரு என்பது மட்டும் நிஜம்!
"வெற்றி கிடைக்குமா? இல்லையா? என்பது மே 4ஆம் தேதி மாசம் தெரிஞ்சிடும்... ஆனா இப்போதைக்கு வினோத்தோட இந்த 'நூதன' ஐடியா... மரண மாஸ்!"
-
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன்












Click it and Unblock the Notifications