ஏப்ரல் 5-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை குஷ்பு தீவிர பிரசாரம்- திமுக அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு ஏப்ரல் 5-ந் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் தீவிர பிரசார மேற்கொள்வார் என்று சுற்றுப் பயண விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால் பேராசிரிய அன்பழகன், கனிமொழி உள்ளிட்ட திமுக முன்னணியினர் பிரசாரம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், முன்னணி பேச்சாளர் குஷ்புவின் சுற்றுப் பயண விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைமைக் கழகம் குஷ்புவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண விவரத்தை வெளியிட்டுள்ளது. திருச்சியில் ஏப்ரல் 5-ந் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் குஷ்பு 22-ந் தேதியன்று திருவள்ளூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
குஷ்பு பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள்:
5.4.2014-திருச்சி
6.4.2014-கரூர்
7.4.2014-ஈரோடு
8.4.2014-நீலகிரி
9.4.2014-பொள்ளாச்சி
10.4.2014-கோவை
11.4.2014-திருப்பூர்
12.4.2014-சேலம்
13.4.2014 -தருமபுரி
14.4.2014-கிருஷ்ணகிரி
15.4.2014-வேலூர்
17.4.2014-ஆரணி
18.4.2014-திருவண்ணாமலை
19.4.2014-காஞ்சிபுரம்
20.4.2014-அரக்கோணம்
21.4.2014-திருப்பெரும்புதூர்
22.4.2014-திருவள்ளூர்
இவ்வாறு திமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications