For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருத்து வேறுபாடு கரைந்ததா?.. பிரசாரத்தில் குதிக்கிறாரா குஷ்பு.. ??

|

சென்னை: திமுக தலைமை தன்னை பிரசாரத்திற்கு அழைக்காததால் அப்செட் ஆகியிருந்ததாக கூறப்பட்ட நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்திலிரு்ந்து அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் வருகின்றன. குஷ்பு அப்செட்டாக உள்ளார், வேறு கட்சியில் சேர முனைகிறார் என்று எப்படி உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வந்ததோ, அதேபோல இந்த செய்தியும் வந்துள்ளது.

Kushboo to campaign for DMK?

குஷ்பு ஏப்ரல் முதல் வாரத்தில் பிரசாரம் தொடங்குவார் என்றும் அவருக்காக பிரசார வேன் தயாராகி வருவதாகவும் இந்த செய்தி கூறுகிறது.

இதேபோல கனிமொழியும் கூட பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இவரும் ஏப்ரல் மாதத்தில் பிரசாரம் செய்வாராம்.

ஒருவேளை அழகிரி தரப்பால் மதுரைக்கு அந்தப் பக்கம் பெரு்ம் பாதிப்பு வரலாமோ என்று திமுக தலைமை சந்தேகிப்பதால் ஸ்டாலினை மட்டும் நம்பாமல், குஷ்பு, கனிமொழி உள்ளிட்டவர்களையும் களம் இறக்கி தானும் களத்தில் குதிக்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

English summary
Unconfirmed sources say that Actress Kushboo all set to camapign for the DMK candidates in the loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X