ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை.. குஷ்பு வருத்தம்
சென்னை: ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள் விளையாட்டு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்தக்கருத்து என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை கண்டித்திருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டில் கருப்பு பணம் புழங்குவதாகவும், அது காட்டுமிராண்டிகள் விளையாட்டு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய அனுமதிக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து குஷ்பு ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாகத்தான் உள்ளது. ஜெய்ராம் ரமேஷ் தனது பேட்டியின்போதே, அது தனது சொந்த கருத்து என கூறிவிட்டார். அதற்கு என்னிடம் பதில் கேட்டீர்கள் என்றால் சொல்லவே முடியாது" என்றார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், மத்திய அரசு அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications