எனக்கு அப்பவே கோவில் கட்டினாங்க... குஷ்பு பெருமிதம்
சென்னை: தவறு செய்தால் நான் யார் காலிலும் விழ தயங்கமாட்டேன்... அதே நேரத்தில் தவறு என்னிடம் இல்லை என்றால் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று கூறியுள்ளார் குஷ்பு. நான் நடிகையாக இருக்கும் போதே கோவில் கட்டினார்கள். இனிமேல்தான் நான் புகழடைய வேண்டும் என்ற அவசியல் இல்லை என்றும் கூறினார்.
நடிகையாக, சின்னத்திரை தயாரிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பன்முகத்தன்மை கொண்டவர் குஷ்பு.
டிவி நிகழ்ச்சியில் நடனமாடுவார்... ஏன் சில நேரம் பிடித்த நடிகருக்கு முத்தம் கொடுத்து டி.ஆர்.பியை ஏற்றவும் தயங்கமாட்டார். அரசியல் மேடையில் வெளுத்து வாங்குவார் குஷ்பு.
பன்முகத்தன்மை கொண்ட குஷ்புவை ' மகளிரும் மக்கள் ஆட்சியும்' என்ற நிகழ்ச்சிக்காக புதிய தலைமுறையினர் பேட்டி எடுத்தனர். சாதாரண பேட்டியாக இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே, நடந்து கொண்டே, கோவில் குளம் என்று ஒரு பயணமாக இருந்தது பேட்டி.

மகள்கள் மீதான பாசம்
நடிகையாக, அரசியல் கட்சியில் ஆக்டிவான தலைவியாக இருந்தாலும் ஒரு அம்மாவாக மகள்களின் மீதான அதீத பாசம் வெளிப்படவே செய்தது. மூத்த மகள் செய்தியாளர் ஆக ஆசைப்படுவதாகவும், இளையமகள் சினிமா இயக்குநராக ஆசைப்படுவதாகவும் கூறினார் குஷ்பு.

சுந்தர்.சிக்கு மரியாதை
அரசியல் கட்சித்தலைவி, சினிமா நடிகை, வீட்டுத்தலைவி, குழந்தைகளுக்கு அம்மா, பாத்திரம் கழுவுகிறேன்.. கக்கூஸ் கூட கழுவறேன் அதுவும் என் வேலைதான்.
எனக்கு பின்னால் இருக்கும் சுந்தர் சி. என்ற பெயருக்கு ஒரு மரியாதையை கொடுக்க வேண்டும். நிறைய பேருக்கு அது தெரியவில்லை. எதையாவது ஏழுதுறாங்க என்று கவலைப்பட்டார் குஷ்பு.

காலில் விழுவேன்
நான் தப்பு செய்தால் குழந்தையின் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்பேன். தப்பு செய்யா விட்டால் எவனா இருந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதுதான் என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம்.

அரசியல்வாதியாக ஆசையா?
அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் கொள்கையோட இருங்கள் என்று கூறிய குஷ்பு, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் உங்களுக்கான தனித்துவத்தை விட்டுக்கொடுத்து விடாதீர்கள் என்றார்.

கட்அவுட், புகழ்
நான் கட் அவுட் வைப்பார்கள் என்றோ, புகழுக்காகவோ, தலைப்புச்செய்தியில் தினசரி வரவேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. நான் நடிகையாக இருக்கும் போதே எனக்கு கோவில் கட்டிவிட்டனர். இனிமேல் நான் எதையாவது செய்து தலைப்புச் செய்தியில் வரவேண்டும் என்ற அவசியமில்லை. நிறைய பணமும் சம்பாதித்து விட்டேன். எனவே அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியல் எதுவும் இல்லை என்று கூறினார் குஷ்பு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications