தனுஷ் யாருடைய மகன்? டுவிட்டர் அக்கப்போரில் குஷ்பு ஆவேசம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தொடர்பாக நடத்திய நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு காட்டமாக பதிலளித்து உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் உரிமை கொண்டாடுகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்துள்ளனர்.

Kushboo slams on twitter comment

இது தொடர்பாக நீதிமன்றத்தை தற்போது நாடியுள்ள கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் ஜனவரி 12-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.

இந்தநிலையில் சன் தொலைக்காட்சியில் குஷ்பு நடத்தி வரும் நிஜங்கள் நிகழ்ச்சியில் கதிரேசன். மீனாட்சி தம்பதி கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. இதில் பேசிய குஷ்பு, தனுஷை எனக்கு 10 வயது முதல் நன்றாக தெரியும். கஸ்தூரிராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார் தனுஷ். கடந்த 1994ம் ஆண்டு முதல் தனுஷ் குடும்பம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

இந்தநிலையில் தனுஷ் உங்கள் மகன் தான் என எப்படி கூறுகிறீர்கள் என கேட்டார். இதற்கு அந்த தம்பதியினர் தனுஷ் எங்கள் மகன் தான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. அதனால் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் வழக்கறிஞர் ஒருவரின் பேட்டியோடு நிகழ்ச்சி முடிவுபெற்றது.

இந்த நிலையில் குஷ்பு பற்றி தனுஷ் ரசிகன் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் இருவருக்கும் இடையே அக்கப்போர் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+