தாலி அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம்… சொல்கிறார் குஷ்பு
சென்னை: தாலி கட்டிக்கொள்வதை எப்படி எதிர்க்க முடியாதோ அதேபோல தாலியை அகற்றுவதையும் எதிர்க்க முடியாது... எதிர்க்கவும் கூடாது என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து கூறியுள்ளார்.
திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சி தாலியில் நம்பிக்கை உள்ள பெண்களின் மனதை புண்படுத்தும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தாலி சென்டிமென்ட் பற்றி பாட்டு பாடி பிரபலமான குஷ்பு, பெரியார் திரைப்படத்தில் மணியம்மையாக நடித்தார். அவர் அணிந்திருந்த உத்திராட்ச தாலி தமிழகம் முழுவதும் பிரபலமானது... வழக்கு போடும் அளவிற்கு போனது. கடைசியில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பெரியார் காலத்திலேயே
பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. திராவிடர் கழகத்துக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள்.

தாலி கட்டும் திருமணங்கள்
தினந்தோறும் தாலி கட்டிக்கொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்தவில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

தனி நபர் விருப்பம்
தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்பதும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது.

தி.க போராட்டம் சரியா?
திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி சரியா? தவறா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை ஏன் மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடு இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications