சுஷ்மாவிற்கு பாராட்டு, இப்போ ஸ்மிருதி இரானிக்கு ஆதரவு: பாஜக பக்கம் சாயும் குஷ்பு
சென்னை: சாதிப்பதற்கு கல்வி முக்கியமல்ல என மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக உள்ள குஷ்பு, லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மோடிக்கு புகழ்ச்சி
இந்நிலையில், தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் புகழ்ந்தார்.

சுஷ்மாவிற்கு பாராட்டு
மத்திய வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுவராஜூக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார் குஷ்பு.

ஸ்மிருதிக்கு ஆதரவு
அதேபோல், கல்வித் தகுதி சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்மிருதி இரானிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கல்வி முக்கியமில்லை
ஸ்மிருதி இரானி சர்ச்சை குறித்து தனது டுவிட்டர் தளத்தில், கருத்து கூறியுள்ள குஷ்பு, ''ஸ்மிர்தி இரானியின் கல்வி தகுதி பற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சாதனை மனிதர்கள்
சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் தெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல், உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம், படிப்பு அல்ல'' எனக் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications