தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா?: நடிகை குஷ்பு விளக்கம்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு ஊழல் காரணமில்லை என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, தற்போது நேரம் மாறியிருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக அதிக இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுகவால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இன்று காலை திமுகத் தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சந்தித்தார் நடிகையும், திமுக நட்சத்திர பேச்சாளருமான குஷ்பு.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் குஷ்பு.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்' எனப் பதிலளித்தார் குஷ்பு.
பின்னர் தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு, ‘அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கும் ஊழல்தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா? என மற்றொரு கேள்வியையே பதிலாக அளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications