ரஜினிக்காக டுவிட்டரில் அடித்து கொள்ளும் குஷ்புவும், தமிழிசையும்...
ரஜினிகாந்த் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று பாஜக அழைப்பு விடுத்துள்ளது குறித்து குஷ்புவும், தமிழிசையும் டுவிட்டரில் மாறி மாறி கடுமையாக பதிவிட்டு கொண்டனர்.
சென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் இணைய அழைப்பு விடுப்பது கெஞ்சுவது போல் உள்ளது என்று நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார்.
தான் அரசியலுக்கு வந்தால் யார் யார் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது அரசியல் பிரவேசம் என்பது உறுதியாகிவிட்டதாகவும், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது மட்டும்தான் பாக்கி என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

அமித் ஷா அழைப்பு
இதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் என்று ரஜினிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். மேலும் தங்கள் கதவுகள் ரஜினிக்காக திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர் அழைப்பு
இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாிநல தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் ரஜினி பாஜகவுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி, கூடுதல் பலம் என்றெல்லாம் தெரிவித்து வருகின்றனர். ரஜினிக்கு பாஜக திரும்ப திரும்ப அழைப்பு விடுப்பது குறித்து நடிகை குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில், ரஜினியை தங்கள் கட்சிக்கு வருமாறு பாஜக கெஞ்சுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

கெஞ்சுவது போன்றதல்ல
இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, நல்லவர்களை வரவேற்பது கெஞ்சுவது போன்றதல்ல. திமுகவில் இருந்து விரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தீர்கள். கட்சி விட்டு கட்சி தாவுவது குஷ்புக்கு வாடிக்கை என்றார்.

கட்சித் தாவுவது வழக்கம்
அதற்கு ரீடுவிட்டிய குஷ்பு, திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தனக்கு மட்டுமே தெரியும். திமுகவில் இருந்து தான் வெளியேறி 6 மாதங்களுக்கு பிறகே காங்கிரஸில் இணைந்தேன். ஆனால் காங்கிரஸில் இருந்து வெளியேறுவோரை அன்றைய தினமே பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறது என்று குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications