தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் குஷ்புவா? மேலிடம் சென்ற பட்டியலில் பெயர்
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த புதிய தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மோடி- ஜெயலலிதா சந்திப்பு குறித்து இளங்கோவனின் சர்ச்சைக்குரிய விமர்சனம், காமராஜர் அரங்க வணிக வளாக நிதி முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள இளங்கோவனுக்கு தலை மேல் எப்போதும் கத்தி தொங்கி வருகிறது.
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி விட்டு தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் முடிவில் மேலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தமிழக பா.ஜ.க. வுக்கு தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளது போன்று தமிழக காங்கிரசுக்கு பெண்ணான குஷ்பு நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications