கூவத்தூரில் பதற்றம்: மக்களைத் தாக்கிய மன்னார்குடி குண்டர்களுக்கு போலீஸ் முழு ஆதரவு!
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க முயன்ற பொதுமக்களை மன்னார்குடி குண்டர்கள் தாக்கினர். அந்த குண்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கல்பாக்கம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் பொதுமக்கள், செய்தியாளர்களைத் தாக்கிய மன்னார்குடி குண்டர்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மன்னார்குடி குண்டர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருவதால் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்துவிடக் கூடாது என்பதற்காக கைதிகளாக கல்பாக்கம் அருகே கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 90 எம்.எல்.ஏக்கள் இந்த ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மன்னார்குடி குண்டர் படையின் கட்டுப்பாட்டில் மக்களின் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கூவத்தூர் பொதுமக்களையும் இந்த மன்னார்குடி குண்டர்கள் படாதபாடுபடுத்தி வருகின்றனர்.
இதனால் கூவத்தூர் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை கூவத்தூர் ரிசார்ட்டுக்கு 2-வது முறையாக சசிகலா சென்றார். அங்கு எம்.எல்.ஏக்களிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அப்போது ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க வேண்டும் என பொதுமக்களும் செய்தியாளர்களும் செல்ல முயன்றனர். ஆனால் மன்னார்குடி குண்டர்கள் பொதுமக்களையும் செய்தியாளர்களையும் தாக்கினர்.
மன்னார்குடி குண்டர்கள் போலீசுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தனர். அப்போது தங்களைத் தாக்கிய குண்டரை பொதுமக்களும் செய்தியாளர்களும் அடையாளம் காட்டி கைது செய்யுங்கள் என வலியுறுத்தினர். ஆனால் போலீசார் பொதுமக்கள், செய்தியாளர்களை தடுத்து வாக்குவாதம் செய்வதில்தான் குறியாக இருந்தனர்.
அத்துடன் பொதுமக்கள், செய்தியாளர்கள் கையில் மன்னார்குடி குண்டர்கள் சிக்கிவிடாமல் இருக்க அந்த கும்பலுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருந்தனர். இதனால் கூவத்தூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications