வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. அச்சத்தில் பொதுமக்கள்
சிறுத்தை தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
வால்பாறை: வால்பாறை அருகே வீட்டின்முன் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணை சிறுத்தையை தாக்கியது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் சத்துணவு மையத்தில் வேலை செய்து வரும் மகாலட்சுமி வயது 36. இவர் அவரது வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று அந்த பெண்ணை தாக்கியது.

இதில் மகாலட்சுமி அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டின் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து சிறுத்தையை விரட்ட முயற்சித்தனர். இதனால் சிறுத்தை மகாலட்சுமியை விட்டு ஓடியது. சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த மகாலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாலட்சுமியின் கை, கால், மற்றும் தொடையில் பலத்த காயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை பெண்ணை தாக்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications