முதல் திருமணத்தை மறைத்த பெண் போலீஸ்.. விபரீத முடிவு எடுத்த காதல் கணவன்.. சிக்கியது உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததால் பெண் போலீசின் காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கெலை செய்யும முன் சாவுக்கு மனைவி சங்கீதாவும் அவரது தற்போதைய காதலன் புருஷோத்தமனும் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள ஒழலூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் யுவராஜ் (24). தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவரும், செங்கல்பட்டில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணிபுரியாற்றி வருபவர் சங்கீதா (30). இவர்கள் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த 4 மாதங்களுக்கு முன், அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதா திருமணம் செய்து வைத்தார். இந்தவேளையில், சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 8 வயதில் குழந்தை இருப்பதும், கணவனை பிரிந்து வாழ்வதும் யுவராஜ்க்கு தெரிய வந்தது.

மது பழக்கம்

மது பழக்கம்

இத்துடன் , சங்கீதாவுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் புருஷோத்தமன் என்பவருடன் சங்கீதா தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு விவகாரமும் யுவராஜ்க்கு தெரியவந்தள்ளது.. இதுபற்றி கேட்டபோது, அவர்களுக்குள் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.

சங்கீதா புகார்

சங்கீதா புகார்

இதையடுத்து, சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2 மாதத்துக்கு முன், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் , இருவரையும் விசாரித்து பிரித்து வைத்திருக்கிறார்.. காதலித்து திருமணம் செய்த ஏமாற்றத்தில், யுவராஜ், மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

சங்கீதா இடமாற்றம்

சங்கீதா இடமாற்றம்

இந்நிலையில், கடந்த 26ம் தேதி சொந்த ஊருக்கு யுவராஜ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த சங்கீதா, தன்னை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டனர். நான் அங்கு செல்கிறேன் என கூறியிருக்கிறார். இதனால் வேதனையடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி நேற்று யுவராஜ் இறந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, யுவராஜ் இறப்பதற்கு முன் எழுதிய, ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அடித்து துன்புறுத்தல்

அடித்து துன்புறுத்தல்

அதில், 'என் சாவுக்கு, மனைவி சங்கீதா மற்றும் தற்போதைய காதலன் புருஷோத்தமன், சங்கீதாவுடன் பணியாற்றும் காவலர்கள் தோழி சந்தியா, ஜீவா ஆகியோர்தான். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்தினார்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார.

வேலூருக்கு மாறுதல்

வேலூருக்கு மாறுதல்

இதற்கிடையில், யுவராஜின் உறவினர்கள், அவரது இறப்புக்கு காரணமான சங்கீதா உள்பட 4 பேரையும் கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால், சடலத்தை வாங்க மாட்டோம் என கூறினர். இதனால் போலீசார், பிரேதத்தை சவ கிடங்கில் வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் சங்கீதா, வேலூருக்கு மாறி சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+