டாஸ்மாக்கில் ஃபுல் போதையில் ரகளை செய்த பெண்- திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் டாஸ்மாக் ஒன்றில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே பாண்டியன் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை கிட்டதட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் மிடுக்கான உடை அணிந்து மது குடிக்க வந்தார்.

டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு பாரில் உட்கார்ந்து மது அருந்தினார். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறவே அங்கிருந்த ஊழியர்களிடமும், மது குடிக்க வந்தவர்களிடமும் ரகளையில் ஈடுபட்டார்.
அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த பெண்ணை பார் ஊழியர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆனால் அவரால் தனது முகவரியை கூட தெளிவாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் அங்கேயே அவரை இறக்கிவிட்டு சென்று விட்டார்.
அதன்பின் அங்கிருந்த கடை முன்பு படுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் வந்த 3 இளைஞர்கள் அந்த பெண்ணை காப்பகத்தில் கொண்டு சேர்ப்பதாக கூறி அவரை ஆட்டோவில் ஏற்றினர்.
சந்தேகம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்" என கேட்டதற்கு, தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என கூறினர். அடையாள அட்டையை கேட்டபோது அவர்கள் விழித்தனர். தவறான எண்ணத்துடன் அந்த பெண்ணை கடத்த முயன்றது தெரியவரவே அவர்கள் சத்தம்போட்டு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெண் காவலர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டு மயங்கி கிடந்த அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications