மெரினா கடற்கரையில் குழந்தை கடத்திய பெண் – போலீசில் சிக்கினார்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடி அருகே உள்ள கந்தன் சாவடியை சேர்ந்தவர் ரெஜினா. இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியேறிய ரெஜினா குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார்.
கணவருடன் பிரச்சனை:
அங்கு பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு இரவு மாநில கல்லூரி எதிரே உள்ள பஸ் நிறுத்ததில் அமர்ந்து இருந்தார்.
பாத்ரூம் சென்ற ரெஜினா:
அப்போது அங்கு வந்த ஒரு பெண் ரெஜினாவிடம் பேச்சு கொடுத்தார். அந்த பெண்ணிடம் தனது சோக கதையை ரெஜினா கூறினார். பின்னர் ரெஜினா குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றார்.
போலீசில் புகார்:
திரும்பி வந்து பார்த்த போது அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இது குறித்து அவர் ஜாம்பஜார் போலீசில் புகார் செய்தார்.
குழந்தையைத் தேடிய போலீசார்:
போலீசார் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் காசிமேடு சிங்கார வேலன் நகரில் ஒரு பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் விலை பேசி கொண்டு இருந்தார்.
குழந்தையை விற்க முயற்சி:
‘‘இந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை. ரூபாய் 1 லட்சம் அல்லது ரூபாய் 50 ஆயிரம் கொடுத்து வாங்கி கொள்ளுங்கள்'' என்று கூறினார். இது பற்றிய தகவல் காசிமேடு போலீசுக்கு கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தப்பட்ட குழந்தை:
விசாரணையில் அவர் வைத்திருந்த குழந்தை கடற்கரையில் கடத்தப்பட்ட ரெஜினாவின் குழந்தை என்பது தெரிய வந்தது.
கடத்தல்காரி செல்வராணி:
அந்த பெண்ணின் பெயர் செல்வராணி என்ற ஆஷியாபேகம் (38) என்பதும் அப்துல் அஜீஸ் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக சென்னை வந்தார், குழந்தையை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications