ஏழ்மையை காரணம் காட்டி கைவிட்ட காதலன்.. தற்கொலை வீடியோவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய காதலி
Recommended Video

மேலூர்: தனது ஏழ்மை நிலையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக காதலித்த தன்னை புறக்கணித்ததால் மனமுடைந்த மதுரை பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் மதுரை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவரும் கல்லூரி மாணவராவார். கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் காதலை வளர்த்த இவர்கள் மியூசிக்கலி ஆப்பையும் விட்டு வைக்கவில்லை.

பெண்ணை பிடித்து போயிற்று
இவர்களது காதல் விவகாரம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிந்துஜாவை ராம்குமாரின் வீட்டுக்கு அழைத்து சென்று அவரது தாயாருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் அவருக்கு அந்த பெண்ணை பிடித்து விட்டது.

குடும்பத்தினர் பெண் கேட்பு
இதையடுத்து வேறு ஜாதியாக இருந்தாலும் ராம்குமாரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. சிந்துஜாவின் வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க ராம்குமாருடன் அவரது குடும்பத்தார் சென்றனர்.

பழகுவதை நிறுத்திய ராம்குமார்
ஆனால் சிந்துஜாவின் வீட்டையும் அவரது ஏழ்மை நிலையையும் பார்த்த அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். சிந்துஜாவிடம் பழகக் கூடாது என பெற்றோர் கண்டித்துவிட்டதால் ராம்குமார் அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார்.

விஷம் குடித்த சிந்துஜா
இதனால் சிந்துஜா மனமுடைந்தார். இருப்பினும் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்யும் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் ராம்குமாருக்கு அனுப்பியுள்ளார். எனினும் ராம்குமார் போன் செய்யாததால் விஷம் குடித்தார் சிந்துஜா.

பலி
உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா, கடந்த புதன்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு தனது தற்கொலைக்கு காதலன் ராம்குமார் தான் காரணம் என்றும் ஏழ்மையை காரணம் காட்டி, ராம்குமார் தன்னை விட்டு பிரிந்ததாகவும், காதலை மீறிய உறவு தங்களுக்குள் இருந்ததாகவும் சிந்துஜா தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்துவிட்டு உயிரிழந்துவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications