திருந்தவே மாட்டீங்களாப்பா.. 'லட்சுமி' குறும்பட டீம் வெளியிட்ட மற்றொரு சர்ச்சை வீடியோ!
Recommended Video

சென்னை: லட்சுமி குறும்பட டீம் மற்றொரு சர்ச்சைக்குரிய வீடியோவோடு களமிறங்கியுள்ளது.
சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' என்ற குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
இந்த 'லட்சுமி' படத்தில் லக்ஷ்மி ப்ரியா என்ற நடிகை ஹீரோயினாக அரிதாரம் பூசியிருந்தார். கள்ளக்காதல் அடிப்படையிலான படம் என்பதால் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது.

பாரதியார் இதற்கா பாட்டெழுதினார்?
படத்தில் கள்ளக்காதலன், ஹீரோயினை தன் வழிக்கு கொண்டுவர பாரதியாரின் கவிதைகளை சொல்லி காண்பிக்கும் காட்சி இருந்தது. இதுவும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
மற்றொரு சர்ச்சை
இப்படி விமர்சனங்கள் உள்ள நிலையிலும், மீண்டும் ஒரு வீடியோவை அதே டீம் வெளியிட்டுள்ளது. பாரதியாரின் வரிகளில், கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவான நிமிர்ந்த நன்னடை என்ற பாடலை இயக்குநர் சர்ஜுன் மற்றும் ஶ்ரீராதா ஶ்ரீநாத் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

பின்னணியில் பாரதியார் பாடல்
அதில் லட்சுமி குறும்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஸ்லைடு ஷோக்களாக ஓடுகின்றன. பின்னணியில், பாரதியார் பாடல் இசைக்கப்படுகிறது. லட்சுமி குறும்படத்தில் கிடைத்த விளம்பரத்தை பயன்படுத்தி மற்றொரு வீடியோவை ஹிட் அடிக்க லட்சுமி குழு களமிறங்கியுள்ளது.

இனியாவது கவனிப்பீர்களா?
அதேநேரம், எதிர்ப்புகள் வந்த பிறகும், பாரதி பாடலை மீண்டும், மீண்டும் இதுபோன்ற ஒரு படத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருப்பது சரியல்ல என்பது தமிழ் ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது. இனியாவது இதை குறும்பட குழு கருத்தில் கொள்ளுமா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications