தொடர் கேலி.. விஜய் டிவிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
சென்னை: ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியை மறைமுகமாக கேலி செய்து, விஜய் தொலைக்காட்சி அது, இது, எது என்ற காமெடி நிகழ்ச்சியில் காண்பித்தது.
அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் கேரக்டருக்கு ஆண் ஒருவரை பெண் வேடமிட்டு நடிக்க வைத்ததுடன், லட்சுமியின் பிரபல டயலாக்குகளான 'போலீச கூப்பிடுவேன்', 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்பதையும் அடிக்கடி சொல்லி அவரை வெறுப்பேற்றியது. முதல் வெர்ஷனை சற்று கனத்த இதயத்துடன், கண்டுகொள்ளாமல், கடந்து சென்றுவிட்டார் லட்சுமி.
Ver. 2 of #EnnamaIppadiPanreengaleMa! Just RT if you are waiting. #AdhuIdhuYedhu pic.twitter.com/5itzsw5GtP
— Vijay Television (@vijaytelevision) October 1, 2015
rn
rnஅது, இது, எது
இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள அது, இது, எது நிகழ்ச்சியின்போது, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா வெர்ஷன்-2' காண்பிக்கப்படுகிறது என்று கூறி விஜய் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சிறு க்ளிப்பிங்சோடு தகவலை பகிர்ந்துள்ளது.

க்ளிப்பிங்ஸ்
அந்த காட்சியில், சொல்வதெல்லாம் பொய் என்ற நிகழ்ச்சி நடப்பது போலவும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற வேடமணிந்த ஆண், கேனத்தனமாக பேசி, நடந்துகொள்வதை போலவும் காட்சிகள் உள்ளன.
|
கோர்ட்டில் சந்திப்பேன்
இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், தனது டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து, விஜய் தொலைக்காட்சியின் டிவிட்டர் அக்கவுண்டிலேயே பதிலடியாக "உங்களை கோர்ட்டில் சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
|
பணம் சம்பாதிக்க
இதைத்தொடர்ந்து விஜய் டிவியை மென்ஷன் செய்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டிவிட்டுகளில் கூறியுள்ளதாவது: இதுபோன்ற முட்டாள்தனங்களை நிறுத்திக்கொள்கிறீர்களா? உங்களது பங்கேற்பாளர்களை பணம் சம்பாதிக்க வேறு எதையாவது செய்ய சொல்லுங்கள்.
|
வாயில் நல்லா வருது
ஊடகங்கள் உட்பட, எனது நலம்விரும்பிகள் அனைவரிடமிருந்தும் நான் ஆதரவை கோருகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு தேவை. தகாத வார்த்தைகளை பேச வேண்டும் என்று எனது நாக்கு நமநமக்கிறது. வெட்கம்.. விஜய் டிவி. இவ்வாறெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்டுகளில் சாடியுள்ளார்.

ஆதரவு, எதிர்ப்பு
இதனிடையே, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், டிவிட்டரில் கருத்துக்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். "நீங்கள் மட்டும் பிறரது அந்தரங்க வாழ்க்கையை வைத்து நிகழ்ச்சி நடத்தினீர்களே.." என்றும், முதல் வெர்ஷனை விஜய் டிவி ஒளிபரப்பியபோது, அது உங்களை பாதிக்கவில்லை என்று பேட்டிகொடுத்தீர்களே என்றும் லட்சுமி ராமகிருஷ்ணனை விமர்சிக்கும் நெட்டிசன்களும் உள்ளனர்.

போலீசில் புகார்
"எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் உள்ளது" என்று கூறி விஜய் டிவியை விமர்சிக்கும் நெட்டிசன்களும் உள்ளனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இன்று மதியம் சந்தித்த, லட்சுமி ராமகிருஷ்ணன், எனது டயலாக்குகளை வைத்து கேலி செய்து என்னை விஜய் டிவி புண்படுத்துகிறது என்று கூறி புகார் அளித்துள்ளார். எனவே, இன்றைய அது, இது, எது நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை விதிக்குமா அல்லது தடைவிதிக்காமல் அப்படியே ஒளிபரப்ப அனுமதிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications