தயா பொறியியல் கல்லூரி விவகாரம்: மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமாக மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியை கட்ட அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்துவிட்டதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இருக்கும் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெறப்பட்டது.
மேலும் அழகிரி மீண்டும் திமுகவில் சேரக்கூடும் என்று இருக்கும் நிலையில் அவர் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications