சுஷ்மா பயணத்தை "முன்னிட்டு" தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படை!
ராமேஸ்வரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பிய நிலையில், தமிழக மீனவர்களை விரட்டியடித்து தனது விஷமத்தனத்தைக் காட்டியுள்ளது இலங்கைக் கடற்படை.
ஈழத்தில் இறுதிப் போர் முடிந்தது முதலே தமிழக மீனவர்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள், இலங்கைக் கடற்படையிடம் சிக்கி. தொடர்ந்து அடி உதை, துப்பாக்கிச் சூடு, கைது, படகுகள் பறிமுதல் என இலங்கைக் கடற்படையின் அட்டகாசம் தொடர் கதையாகி விட்டது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். நேற்று தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இலங்கைக் கடற்படையினர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகை மறித்த இலங்கைக் கடற்படையினர் ரப்பர் குண்டுகளால் தமிழக மீனவர்களைத் தாக்கினர். பின்னர் மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.
இலங்கைப் படையினரிடமிருந்து தப்பி இந்திய மீனவர்கள் கரை திரும்பி நடந்ததை மீனவளத்துறையினரிடம் புகாராகக் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications