ஜெ.ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை.

ஜெயலலிதா சிகிச்சையின் போது அவர் உடல் நிலை குறித்து அவருடன் இருந்தவர்கள் கவலைப்பட வில்லை. அப்போதே சதி ஆரம்பமாகி விட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முறையான, உண்மையான தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
கடந்த தேர்தலில் திமுக - அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் 1.1 சதவீதம் மட்டுமே. 89 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபையில் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக திமுக உள்ளது. மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெறும் கட்சியே திமுக. என்றைக்கும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் கட்சி அல்ல. திமுகவைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வியுற்ற கட்சியும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications