இந்த வருட ரஜினி பிறந்த நாள் "லிங்கா"வுடன்... லதா ரஜினிகாந்த் உற்சாகப் பேட்டி!
சென்னை: ரஜினி பிறந்த நாளுக்காக எந்தக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்யவில்லை. அவரது லிங்கா படம்தான் எங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் லதா ரஜினிகாந்த்.

பேட்டியிலிருந்து சில பகுதிகள்.... இங்கே உங்களுக்காக...
டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்த நாள். இந்த முறை லிங்காவும் அதே தேதியில் ரிலீஸாகிறது. எப்படி இதை விசேஷமாக பார்க்கிறீர்கள்...
இது உண்மையிலேயே விசேஷமான தினம். அவரது திரையுலக வாழ்க்கையில், இப்போதுதான் முதல் முறையாக அவருடைய பிறந்த நாளில் அவரது படம் ஒன்று ரிலீஸாகிறது.
இந்தப் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களோடு குடும்பத்தாராகிய நாங்களும் இந்த முறை கொண்டாடவுள்ளோம். உலகின் பல நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கோடானு கோடி ரசிகர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாங்கள் மிகவும் பெருமையாக உணர்கிறோம்.
ரஜினி பிறந்த நாளை குடும்பத்தில் எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?
எதையும் திட்டமிட முடியவில்லை. காரணம், ஒவ்வொரு நிமிடமும் சர்ப்ரஸாக இருக்கிறது. அவரை அமைதியாக ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். படம் தொடர்பாக நிறைய பிரஷர்கள். ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக உள்ளோம். என்னைப் பொறு்ததவரை அவரது பிறந்த நாள் இந்த ஆண்டு லிங்காவுடன்.
உடல் நிலை காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக ரஜினி படம் எதையும் செய்யவில்லை. எனவே லிங்கா அவருக்கு சவாலாக இருந்ததா.?
கோச்சடையான் வித்தியாசமான படம். வேறு விதமான படம். தொழில்நுட்ப ரீதியில் அது முற்றிலும் மாறுபட்ட படம். அதன் பிறகு நல்ல படத்துக்காக அவர் காத்திருந்தார். அவருக்கு லிங்கா சவாலாகவே இல்லை. கேமரா முன்பு வந்து விட்டால் அவர் ஒரு நடிகராக மாறி விடுவார். அப்படித்தான் எப்போதுமே அவர் இருக்கிறார்.
அவருக்குள் அப்படி ஒரு மாஜிக் உள்ளது. சரியான தருணத்திற்காக மட்டுமே அவர் காத்திருந்தார். அவரது மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் கேமரா முன்பு வந்து நின்று விட்டால் அவர் முழுமையான நடிகராக மாறி விடுவார். எனவே லிங்காவில் அவர் பிரச்சினை, சிரமம் எதையும் சந்திக்கவில்லை. அவருக்கு வாய்த்த மாஜிக் அது என்றார் லதா ரஜினிகாந்த்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications