லதா ரஜினிகாந்தின் கிண்டி ஆஸ்ரம் பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்
லதா ரஜினிகாந்தின் கிண்டி ஆஸ்ரம் பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் நடத்தி வந்த ஆஸ்ரம் பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் தி ஆஸ்ரம் பதன்நிலை மேல்நிலைப் பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். மழலையர் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை இங்கு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
இதன் நில உரிமையாளருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதனிடையே பள்ளி கட்டிடத்தை தாம் பூட்டிவிட்டதாக நில உரிமையாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

வாடகை பாக்கி அல்ல
வாடகை பாக்கிக்காக பள்ளிக் கூடம் மூடப்பட்டது என்பது தவறான தகவல். இப்படி தவறான தகவலை பரப்பிய நில உரிமையாளர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அந்த இடத்துக்கு வாடகை பாக்கி எதுவும் இல்லை.

வேறு இடத்துக்கு மாற்றம்
பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். கிண்டி வளாக பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சட்ட ரீதியாக ஒப்பந்தம்
வாடகை கொடுத்தற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக சட்ட ரீதியாகவே ஒப்பந்தம் போட்டுள்ளோம். இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

ஆஸ்ரம் பள்ளி வேண்டுகோள்
முன்னதாக ஆஸ்ரம் பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் பள்ளி தொடர்பாக வரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications