ஜூன் 13ம் தேதி முதல் சட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூரில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 13ம் தேதி தொடங்கும்.

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications