டக டக டக டக டக டர்ர்ர்… வாயில் ஹெலிகாப்டர் விட்ட ஸ்டாலின்
திருச்சி: உங்களை எல்லாம் நேர்ல வந்து பாக்கிறப்ப எனக்கு உற்சாகமாக இருக்கு... உங்க எழுச்சியான குரலை கேட்கிறப்ப எனக்கு புல்லரிக்குது... அதனாலதான் நான் ரோடு வழியா உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
ஆனா ஜெயலலிதா எப்படி வர்றாங்க... டக டக டக டக டக டக... டர்ர்ர்.... என்று கையால் சுத்தி வாயால் ஹெலிகாப்டர் விட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
திருச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து மத்திய பேருந்து நிலையம் அருகே மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:
''வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன், கலைஞரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
அன்பழகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று உங்களிடம் வாக்கு கேட்டு உங்களை தேடி நீங்கள் இருக்கும் இடம் தேடி நேரடியாக வந்துளோம்

ஹெலிகாப்டரில் வரவில்லை.
நான் சாலை வழியாக வந்தேன். ஆனா ஜெயலலிதா எப்படி வர்றாங்க... டக டக டக டக டக டக டர்ர்ர்...( கையை சுத்தி காண்பித்து வாயில் சவுண்ட் எபெக்ட் தரவே கூட்டம் ஆர்ப்பரிக்கிறது). இப்படி ஹெலிகாப்டர் மூலம் வர்றாங்க. எனவே ஹெலிகாப்டரை பார்த்தாலே ஜெயலலிதா நினைவு வருகிறது.

சொன்னதை செய்வோம்
எந்த நேரமும் உங்களுக்காக தமிழக மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க. தான். ஆனால் 3 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பயன்படக்கூடிய அளவில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் உறுதிமொழி கூறி நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதனை நிறைவேற்றுவோம். சொன்னதை செய்வோம், சொல்வதைத்தான் செய்வோம்.

மக்களைப் பற்றி கவலையில்லை
ஆனால், ஜெயலலிதாவுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட சாதனை திட்டங்களை முடக்கியதுதான் அ.தி.மு.க.வின் சாதனை.

பொய் பிரசாரம்
இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று ஜெயலலிதா, கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல், தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

எம்.ஜி.ஆருக்கு துரோகம்
துரோகத்தைப் பற்றி ஜெயலலிதா கூறுகிறார். அவர் எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்தவர். அவர் துரோகத்தைப் பற்றி பேசலாமா?

ஒரே மாதிரி ஏன் தளபதி?
ஜெயலலிதாவின் பேச்சுக்களுக்கு போகும் இடமெங்கும் பதிலடி தரும் மு.க.ஸ்டாலின், ஒரே மாதிரியாக எதையாவது செஞ்சீங்களா? என்னத்த செஞ்சி தொலைச்சீங்க? என்னத்த செஞ்சி கிழிச்சீங்க என்று கேட்பது எரிச்சலாக இருக்கிறதே மிஸ்டர் தளபதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications