விஜயதாரணியின் கணவர் உடலுக்கு ஸ்டாலின், இளங்கோவன், பொன்.ராதா, வாசன் அஞ்சலி
சென்னை: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடியின் உடலுக்கு திமுக, காங்கிரஸ் தலைவர்கள்,பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி. வழக்கறிஞரான இவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். 50 வயதான சிவக்குமார் கென்னடிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதும், இசபெல்லா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் விஜய தாரணி டெல்லி போயிருந்தார். கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவசரம் அவசரமாக கிளம்பி நேற்று மாலைக்கு மேல் சென்னை திரும்பினார். கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
சிவக்குமார் கென்னடி - விஜயதாரணியின் மூத்த மகள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இதனால் மகளுக்கு வசதியாக அருகில் உள்ள முகலிவாக்கத்தில் வசித்து வருகிறது விஜயதாரணி குடும்பம்.
சிவக்குமார் கென்னடியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசீனா சையத் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்கம் கேட்ட ஜி.கே.வாசன், பொன்.ராதா
அதேபோல தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று விஜயதாரணியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications