ஒரு மணி நேர இடைவேளைக்குள் 3 முதல்வர் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.. பரபரத்த தேர்தல் களம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆகியோர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான, அன்புமணி ராமதாஸ், மதியம் 12.10 மணியளவில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நூற்றுக் கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று மதியம் 12.25 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் 4ல், தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது சசிகலா உடன் இருந்தார்.

அதிமுக சார்பில் எஞ்சிய 226 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் 28ம் தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

அதேபோல திருவாரூரில் இன்று திமுக தலைவர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு இன்று காலை செல்ற கருணாநிதி பின்னர் மதியம் 12.45 மணி அளவில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம், வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஒரு மணிநேர இடைவேளைக்குள், மூன்று பெரிய கட்சிகளின் முதல்வர் வேட்பார்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் வைகோ, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டது. இதில், வைகோ தனக்கு பதிலாக வேறு வேட்பாளரை களமிறக்கிவிட்டு, சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை அறிவித்துவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications