இரவு முழுவதும் உறுமல் சத்தம்... பாபநாசம் அருகே நடமாடும் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை
சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்: தொடர்ந்து சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து கொண்டிருப்பதால் அதனை கூண்டுவைத்து பிடிக்க பாபநாசத்தின் மலையடிவார பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாபநாசத்தின் மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, அருகிலிருக்கும் வனப்பகுதிகளிலிருந்து விலங்குகள் வந்துவிடுகின்றன. மலையடிவார பகுதியில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு சொந்தமான ஆடுகள், கோழிகள், நாய்களை அடித்து கொன்று வருகின்றன. ஆடுகள், கோழிகளை நம்பியே ஜீவனம் நடத்துவதால் எப்படியாவது வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து திருப்பதியாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்னும் விவசாயி கூறும்போது, நேற்றிரவுகூட சிறுத்தையின் உறுமல் கேட்டதாக கூறுகிறார். நள்ளிரவு உறுமல் சத்தம் கேட்டு எழுந்து போய் பார்த்தால், தன்னுடைய ஆட்டை ஒரு சிறுத்தை அடித்து கொன்று சாப்பிட முயன்றதாகவும், அதனால் சத்தம் போட்டு ஊர்மக்களை கூப்பிட்டதாகவும் முருகன் கூறுகிறார்.
எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையினால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், வெளியில்கூட வர முடியாமல் பயமாக உள்ளதாகவும் திருப்பதியாபுரம் மக்கள் கூறுகின்றனர். பீதியை கிளப்பி வறும் சிறுத்தையை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications