பேசலாம் வாங்க.. ஒலிப்பெருக்கியில் போலீசார் அறிவிப்பு..கடலுக்குள் இறங்கிய மாணவர்கள் வெளியே வர மறுப்பு
சென்னை மெரினாவில் கலைந்து போக மறுத்து கடலுக்குள் இறங்கியவர்களை ‘பேசலாம் வாங்க’ என்று போலீஸ் அதிகாரி சங்கர் ஒலிப்பெருக்கியில் அறிவித்துள்ளார். ஆனால் மாணவர்கள் கடலில் இருந்து வெளியேற தொடர்ந்து மறுத்து
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டு மாணவர்களை கலைத்து வருகின்றனர். மாணவர்கள் மறுத்து வருவதால் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர் போலீசார்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி கடந்த 6 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும் நிரந்தர சட்டம் தேவை என்று கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சொல்ல வார்த்தைகள் இல்லை....#Marinaprotest #marinabeach pic.twitter.com/fDhS9rIpgB
— Theep Ganthan (@theep16) January 23, 2017
இந்நிலையில், இன்று காலையில் மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்களை கலைந்து போகும்படி போலீசார் அறிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து கடலுக்குள் போராட்டக்காரர்கள் சென்றனர்.
இதனையடுத்து, போலீஸ் அதிகாரி சங்கர், ஒலிப்பெருக்கியின் மூலம் "அரசு உங்களுக்கானதை செய்து கொடுத்திருக்கிறது. கடலில் இருந்து வெளியே வாருங்கள் பேசலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுவரை நீங்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வந்தீர்கள். அதுபோன்றே தற்போது பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்" என்று அறிவித்துள்ளார்.
ஆனால், மாணவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இதனிடையே 2 ஹெலிகாப்டர்கள் மெரினா பகுதியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு மேல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications