சோடா பாட்டில் ஜீயருக்கு கொலை மிரட்டலாம்... போலீஸில் புகார்

சோடா பாட்டில் வீச தெரியும் என்று கூறிய ஜீயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும் என்ற சொன்ன ஜீயருக்கே மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.

Life threat to Sadagoba Ramunuja Jeeyar

இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுப்தாக கூறப்படுகிறது. இதற்காக வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் வைரமுத்துவை கண்டித்து நடத்திய பொதுக் கூட்டத்தில் சாமியார்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் எங்களுக்கு சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜீயருக்கு தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸில் ஜீயர் புகார் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+