தடையை மீறுவோம்.. ஜல்லிக்கட்டை நடத்துவோம்.. 'அதிமுக' கூட்டணி நடிகர் கருணாஸ்
வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று நடிகர் கருணாஸ் சபதம் ஏற்றிருக்கிறார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை: தென் மாவட்டங்களில் பிரபலமான விளையாட்டு மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு. பொங்கலின் போது நடத்தப்படும் இந்த விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்துவோம் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
பொங்கல் திருவிழாவின் போது, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி படுஜோராக நடைபெறும். இந்த விளையாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அவசரச் சட்டம், பீட்டா என்ற விலகின ஆர்வலர்களின் அமைப்பு என அனைத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஊதி பெருக்கி நடத்தவிடாமல் செய்துவிட்டது. இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசோ, மாநில அரசோ சுமூக தீர்வுகள் ஏற்படுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என்று சென்னையில் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிப் போயுள்ள டெல்டா விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications