அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு.. உடைந்து விழுந்த பெரிய மின்விளக்கு.. காயமின்றி தப்பிய ராமராஜன்
சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தின் போது மின்விளக்கு உடைந்து விழுந்ததில் நடிகர் ராமராஜன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அதிமுக தொண்டர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில், வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் ராமராஜன், பட்ஜெட் பற்றி விளக்கிப் பேசினார். கூட்ட மேடையில் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

பின்னர் கூட்டம் முடிந்த நிலையில், ராமராஜன் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்றபோது, அவருடன் கைகுலுக்க தொண்டர்கள் போட்டிப்போட்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கிய ராமராஜனை அதிமுகவினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மின்விளக்கு ஒன்று மேலிருந்து உடைந்து விழுந்தது. இதில் ராமராஜன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
ஆனால், அதிமுக தொண்டர்கள் முனுசாமி (50), சிவானந்தம் (55) ஆகியோர் மீது மின்விளக்கு விழுந்ததில் அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications