சென்னையில் இரவில் பரவலாக மழை.. இன்றும் பெய்யலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டப் பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது.
வட கிழக்குப் பருவமழைக் காலம் இந்த முறை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றசாதக நிலையும் தற்போது கூடி வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் நிலைமை மாறியது. இரவில் லேசான மழை பெய்தது. இருப்பினும் அதிகாலையில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நகரின் பல பகுதிகள் இந்த மழையால் நனைந்து போயின. அதேபோல ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மேலும், திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications