திருச்சி வாலடி- பொன்மாலை இரட்டை தண்டவாள பணி.... 10 நாட்களுக்கு ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு
திருச்சி மாவட்டம் வாலடி- பொன்மாலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருச்சி ரயில் நிலையம் வழியாக செல்லும் சில ரயில்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மாற்று பாதையில் செல்லும்படியாகவும், தாமதமாக செல்லும்படியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இவ்வழியாக செல்லும் ரயில்கள் மே மாதம் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நேரம் மாற்றியமைக்கப்பட்டும், வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.

ரயில் எண்: 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழன் (மே 14, 18) ஆகிய இரு முறை மட்டுமே இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 6.10 மணிக்கு அதாவது, 70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
ரயில் எண் : 56821, மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும்.
ரயில் எண் : 56822, திருநெல்வேலி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும்.
ரயில் எண் : 16127, சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயில் மே 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து 9.25 மணிக்கு (70 நிமிடங்கள் தாமதம்) புறப்படும்.
ரயில் எண் : 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் இரு முறை இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 21-ஆம் தேதி அன்று 7 மணிக்கு (2 மணி நேரம் தாமதம்) புறப்படும்.
ரயில் எண்: 12636, மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பிரதான ரயில் பாதை வழியாக இயங்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 23-ஆம்தேதி மதியம் 1.30 மணி அளவில் விழுப்புரத்தை அடையும்.
ரயில் எண்: 16127, எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கு வந்தடையும்.
ரயில் எண்: 15120, உ.பி. மாநிலம் மண்டுவாடியா- ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர ரயில் வரும் 23-ஆம் தேதி 1 மணி நேரம் தாமதமாக திருச்சியை சென்றடையும்.
ரயில் எண்: 16128, குருவாயூர்- சென்னை எழும்பூர் ரயிலானது திருச்சி, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக திருச்சியை வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக வரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications