"கபாலி"க்கு தடை கோரி வழக்கு- விளக்கம் அளிக்க ரஜினிக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: 'லிங்கா' படத்துக்கு நஷ்டஈடு வழங்காமல் 'கபாலி' படத்தை வெளியிடக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகினரும் இப்படத்தைப் பார்க்க காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 'லிங்கா' படத்தின் நஷ்டத்தை ஈடு செய்யாமல் 'கபாலி' படத்தை வெளியிடக் கூடாது என இப்படத்தை வெளியிடத் தடைகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோவை நகர விநியோகஸ்தர் சுக்ரா பிலிம்ஸ் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ரஜினி, தாணு உட்பட 7 பேரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லிங்கா படத்துக்கு ஏற்கெனவே ரஜினி மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு சமரசமாகிவிட்டதாக ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், கபாலி வெளியாக 2 நாட்கள் இருக்கும்போது வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications