லிங்கா பிரச்சினை... முழு வீச்சில் களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!
லிங்கா பிரச்சினையில் அதை விநியோகித்த சிலர் ரஜினிக்கு எதிராக மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ரஜினி ரசிகர்கள், இப்போது முழு வீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டனர்.
முதல் கட்டமாக லிங்கா விநியோகஸ்தர்கள் நடத்தும் பிச்சை போராட்டத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்து அந்தப் படம் நஷ்டம், படம் சரியில்லை, ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டது, கருணாநிதி மாதிரி இது என் கடைசி படம் என ரஜினி அறிவித்திருக்க வேண்டும், ரஜினியை நம்பினால் தெருவில் பிச்சைதான் எடுக்க வேண்டும்... என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் சில 'லிங்கா விநியோகஸ்தர்கள்'.
அவர்கள் இப்படிச் சொல்லும்போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் மனம் கொதித்தாலும், தங்கள் தலைவர் ரஜினியின் உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாமல் பொறுமை காத்தனர். பல்வேறு எதிர் போராட்டங்களை நடத்த அவர்கள் அனுமதி கேட்ட போதும், ரஜினி மன்ற தலைமை அமைதி காக்கும்படி கூறிவிட்டது.
இந்த நிலையில்தான் மெகா பிச்சைப் போராட்டத்தை, அதுவும் ரஜினி வீட்டு முன்பிருந்து ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தனர் 'லிங்கா விநியோகஸ்தர்கள்'.
இந்த அறிவிப்பு வந்தததிலிருந்து கொதித்துப் போயுள்ள ரஜினி ரசிகர்கள், பதிலுக்கு தாங்களும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகியுள்ளனர். மெகா பிச்சை போராட்டத்தை நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், அதே தேதியில் தங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாகவும், லிங்கா மூலம் இந்த விநியோகஸ்தர்கள் எப்படியெல்லாம் சம்பாதித்தார்கள் என்பதை ஆதாரங்களோடு வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் என்றில்லாமல், மாவட்டந்தோறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறார்களாம் ரஜினி ரசிகர்கள்.
முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ரசிகர்கள் சார்பாக நடக்கப் போகும் போராட்டம் குறித்து அம்மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன் செய்தித் தாள்களில் விளம்பரம் தந்துள்ளார்.
அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகளும் போராட்ட அறிவிப்பை வெளியிடப் போகிறார்களாம். மேலும் ரஜினியின் சம்மதத்துக்கு காத்திராமல் தன்னிச்சையாக இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும், லிங்கா விநியோகஸ்தர்கள் மன்னிப்புக் கேட்கும்வரை இது தொடரும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications