தஞ்சையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் மது விற்பனை... மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்ததாக கூறி டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக அரசு அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. அதன்படி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது.

இதேபோல தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளில் ஒரு கடையை மாவட்ட நிர்வாகம் மூடியது. 2 நாட்கள் மட்டுமே அந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில் 3-வது நாளில் இருந்து அந்த கடைவழக்கம் போல திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும், மூடுவதற்கு உத்தரவிடப்பட்ட அந்த கடைக்கு மதுபான வகைகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி மண்டல மேலாளர் உதயகுமார், சாலியமங்கலம் கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறந்து வியாபாரம் செய்ததாக கூறி டாஸ்மாக் மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications