40 வருட கால "திரில்".. மீண்டும் கலக்கும் "லிரில்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனை பேர் இந்த சோப்பைப் போட்டுக் குளித்திருப்பார்களோ.. ஆனால் இந்த சோப் விளம்பரத்தை மட்டும் மறந்திருக்கவே முடியாது. ஆம், அதுதான் லிரில்.

சில தயாரிப்புகள் அதன் தரத்திற்காக பிரபலமாகும். ஆனால் சில தயாரிப்புகளோ வெறும் விளம்பரத்தால் பிரபலமாகும். லிரில் சோப் 2வது ரகமாகும்.

இந்த சோப்புக்கான விளம்பரம் அப்படி ஒரு ஹிட் அடித்தது அந்தக் காலத்தில். விளம்பரம் டிவியில் வந்தாலே ஓடிப் போய் மக்கள் திரில்லோடு பார்த்த காலம் அது. காரணம் விளம்பரம் அப்படி.

இந்துஸ்தான் லீவர்

இந்துஸ்தான் லீவர்

இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் தயாரிப்புதான் லிரில் சோப். லக்ஸைப் போலவே இந்த சோப்பும் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் ஒரு காலத்தில். லக்ஸ் சினிமா நடிகைகளின் அழகு சோப்பாக வலம் வந்த நேரத்தில் லிரில் சோப் மக்களிடையே திரில் சோப்பாக வலம் வந்தது.

லா.. லலாலாலா...!

லிரில் சோப் என்றதுமே அடுத்து நமது மனதில் வந்து நிற்பது லா.. லாலாலா என்ற ஹம்மிங்தான்.. அந்த அளவுக்கு மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விளம்பரம் லிரில் விளம்பரம்.

லிரில் அழகி

லிரில் அழகி

நீர்வீழ்ச்சியில் டூ பீஸ் உடையில் மின்னலென ஒரு அழகி குளிக்க, அவரது கையில் பட்டுத் தெறிக்கிறது லிரில் சோப்.. இதுதான் அந்த விளம்பரம். பாடல் இல்லை, வசனம் இல்லை.. அந்த அழகியின் குளியலும், லாலாலா ஹம்மிங்கும் மட்டுமே. இந்தியா முழுவதும் மிகப் பெரிய ஹிட்டடித்த விளம்பரம் இது.

1975ல்

1975ல்

லிரில் கேர்ள் என்ற கான்செப்ட்டை லின்டாஸ் நிறுவனம் 1974ம் ஆண்டு உருவாக்கியது. இதை 1975ம் ஆண்டு களத்தில் இறக்கியது. அதன் பிறகு நடந்தது வரலாறு.

கரேன் லூனல்

கரேன் லூனல்

முதல் லிரில் அழகி என்ற பெருமையைப் பெற்றவர் கரேன் லூனல். உண்மையில் இவர்தான் மக்கள் மனதில் இன்னும் பதிந்து போயுள்ளார். பிகினி உடையில் இந்தியப் பெண் தோன்றுவது எல்லாம் அப்போது பெரிய சமாச்சாரம். அந்த வகையில் கரேனின் நடிப்பு அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

10 வருடம் கலக்கிய லூனல்

10 வருடம் கலக்கிய லூனல்

1975ம் ஆண்டு அறிமுகமான லூனல் அதன் பிறகு 1985 வரை கலக்கினார். கிட்டத்தட்ட 10 வருடம் லூனலின் விளம்பரம்தான் இந்திய சோப் சந்தையைக் கலக்கி வந்தது.

மேலும் மேலும் அழகிகள்

மேலும் மேலும் அழகிகள்

அதன் பின்னர் புதுப் புது அழகிகளை அறிமுகம் செய்தது இந்துஸ்தான் லீவர். பூஜா பத்ரா, ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன் என்று பலரும் வந்தனர். ஆனால் கரேன் லூனலுக்கு நிகராக இதுவரை யாரும் வரவில்லை.

மீண்டும் வந்த திரில்

இந்த நிலையில் 2009ம் ஆண்டுடன் நின்று போயிருந்த லிரில் அழகி விளம்பரம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. புதிய அழகியுடன், அதே பச்சைப் பசேல் குளுமையுடன் டிவி பெட்டிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கும் லிரில் அழகி.. 40 வருடமாகியம் இன்னும் இளமை மாறாத புத்துணர்ச்சியோடு மக்களை ஆக்கரமித்திருப்பது ஆச்சரியம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+