திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் எல்.கே. சுதீஷ் போட்டி?
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தேதி மற்றும் கூட்டணி தொகுதி பங்கீடு முடியும் முன்பே அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 740 வாக்குகளை பெற்றது தேமுதிக. தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துவேல்ராஜ், வெளியூர்காரர். தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாத அவருக்கே இப்படி வாக்குகள் கிடைத்தன. தற்போது பாமக, மதிமுக, பாஜக மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி பலத்துடன் போட்டியிட உள்ளதால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் தேமுதிக.வினர்.
இதனாலேயே திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட பிரேமலதா ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதால் அவரது சகோதரர் எல்.கே. சுதீஷ் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்பதாலேயே தேமுதிகவினர் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications