உள்ளாட்சி தேர்தல்: விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரிய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரும் 18ம் தேதி நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என்று பாஜக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

அங்கு அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு விஜயகாந்திடம் கேட்டோம். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தனது முடிவை ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக கூறினார். மேலும் பாமக தலைவர்களை சந்திக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழிசை ஆதரவு கோரினார். வைகோவும் உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதரவு பாஜகவுக்கு என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications