அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ
வித்தியாசமான மாற்றத்தை இந்த தேர்தல் ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
சென்னை: எப்போதுமே இல்லாத பல முக்கிய திருப்பங்களையும், நல்மாற்றங்களையும் இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல் ஏற்படுத்தி உள்ளது.. 79 வயது பாட்டியும் ஜெயித்துள்ளார்.. 21 வயது பேத்தியும் ஜெயித்துள்ளார் என்றால்.. மாற்றம் எங்கேயோ நிகழ ஆரம்பித்துவிட்டது என்றே பொருள்.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.. 2 கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த தேர்தலின்போது பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று மொத்தம் 315 மையங்களில் நடந்தது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

சந்தேக கண்கள்
எப்பவும் இல்லாமல் இந்த முறை தேர்தல் மிக மிக வித்தியாசமாக நடந்தது.. வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி நடந்தது.. இளம் தலைமுறையினர் ஏராளமானோர் வரிந்து கட்டிக் கொண்டு மனு தாக்கல் செய்தனர்.. 21, 22 வயதுக்காரர்களுக்கு என்ன அரசியல் தெரிந்துவிட போகிறது.. தொகுதி மக்களிடம் எப்படி அணுக போகிறார்கள் என்ற சந்தேகக்கண்கள் வேட்பு மனு தாக்கலின்போதே ஆரம்பித்தன.

இளைஞர்கள்
ஆனால், இவர்கள் அளித்த பேட்டிகளும் தங்கள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்த புரிதலும்தான் இளைஞர்களை பெருமளவு வெற்றி என்ற முகப்பில் கொடு வந்து நிறுத்தி உள்ளது. 21 வயதே ஆன கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி கிருஷ்ணகிரியில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

வீரம்மாள்
அதேபோலதான் 79 வயது பாட்டியின் வெற்றியும்.. 60 வயதுக்கு மேல் அரசியலில் நின்றாலே, இவர்கள் இந்த வயதில் என்னத்த தொகுதிக்கு பெரிசா செய்துவிட போகிறார்கள் என்ற சலிப்பை தருவது இயல்பு.. ஆனால் மதுரையை சேர்ந்த வீரம்மாள் அபார வெற்றி பெற்று முன்னிலையில் வந்து நின்றுள்ளார்.. இது ஏதோ அதிர்ஷ்டத்திலோ சைக்கிள் கேப்பிலோ வந்த வெற்றி கிடையாது.. இதற்கு முன்பு 2 முறை போட்டியிட்டு தோற்று.. 3-வது முறையாக விடாமுயற்சியால் வெற்றி பெற்றுள்ளார் வீரம்மாள்.. இந்த பாட்டி தென் மாவட்டம்.. 21 வயது பேத்தி மேற்கு மாவட்டம்.. என புதிய வரலாறு படைத்துவிட்டனர்.

திருநங்கை
இவர்களுக்கு நடுவில் திருநங்கை ரியாவின் வெற்றி அசாத்தியமானது.. திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிபெற்றுள்ளார்.. போன நவம்பர் மாதம் நடந்த திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

வெற்றி
இதனையடுத்து, திருநங்கைகள் பலரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதுமட்டுமல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 2வது வார்டு எஸ்சி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. 2ஆவது வார்டில் திருநங்கை ரியா திமுக சார்பில் போட்டியிட்டார். இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

மாற்றம்
ஆக... இந்தபாட்டி வீரம்மாள்.. பேத்தி ஜெய்சந்தியா ராணி.. திருநங்கை ரியா என ஒரு மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியாக இந்த பிரசிடென்ட்டு தேர்தல் ஏற்படுத்தி விட்டது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications