1.31 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகாலம் நிறைவு : கார், போன், அலுவலகத்தை ஒப்படைக்க உத்தரவு
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடி வடைகிறது. இதையடுத்து, எந்தெந்த நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்கான அரசாணை, இன்று வெளியாகியுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக அறை, கார்,
சென்னை : தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 31,794 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக அறை, கார், போன் ஆகியவற்றை இன்று மாலைக்குள் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடி வடைகிறது. இதையடுத்து, எந்தெந்த நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்கான அரசாணை, இன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் 25ம் தேதி முதல் உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரிகள் கவனிக்க உள்ளனர். தனி அதிகாரிகள் அடுத்த 6 மாதத்துக்கு அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை இப்பொறுப்பில் இருப்பார்கள்.

தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 31,794 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அலுவலக அறை, கார், போன் ஆகியவற்றை இன்று மாலைக்குள் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிந்து முதல் கவுன்சில் கூட்டம் கூடும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ம் தேதி வரையிலோ தனி அதிகாரிகளே அந்த பொறுப்பில் இருப்பர்.
ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 5 ஊராட்சிகளுக்கு ஒரு தனி அதிகாரி வீதம் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வாகனம், ஒரு ஊராட்சிக்கு 50 லிட்டர் டீசல் என 250 லிட்டர் டீசல், தேவையான வசதிகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications